Stereo Amplifier

Complete Stereo Amplifier Assembling & Wiring Guide (Tamil) - 1.5 Hours Full Practical Course

Overview
Curriculum

ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையர் அசெம்பிளிங் மற்றும் முழு வயரிங் நேரடி செய்முறைப் பயிற்சி!

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ துறையில் ஆர்வமுள்ளவர்கள், தாங்களாகவே ஒரு பவர்ஃபுல் ஸ்டீரியோ ஆம்ப்ளிஃபையரை ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக உருவாக்கி வயரிங் செய்வதற்கான ஒன்றரை மணி நேர முழுமையான பிராக்டிகல் வீடியோ வகுப்பு இது.

தொழில்நுட்ப ரீதியான எந்தக் குழப்பமும் இல்லாமல், ஒவ்வொரு இணைப்பையும் தெளிவாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த முழு வீடியோ பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒன்றரை மணி நேர முழு வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்வது:

  • பாகங்கள் தேர்வு & அறிமுகம்: ஆம்ப்ளிஃபையர் போர்டு, டிரான்ஸ்பார்மர், பவர் சப்ளை கெபாசிட்டர்கள், டயோடுகள் மற்றும் கனெக்டர்கள் பற்றிய அடிப்படை விவரங்கள்.

  • பவர் சப்ளை உருவாக்கம்: ரெக்டிஃபையர் சர்க்யூட் அமைத்தல், பில்டரிங் மற்றும் சரியான DC வோல்டேஜ் வயரிங்.

  • ஆடியோ சிக்னல் & போர்டு வயரிங்: இன்புட் ஆடியோ லைன், வால்யூம் கண்ட்ரோல் (Potentiometer) மற்றும் ஆம்ப் போர்டு வயரிங் முறைகள்.

  • ஹம்மிங் & நாய்ஸ் தடுக்கும் வழிகள்: ஆடியோவில் ஏற்படும் கிரவுண்ட் லூப் (Ground Loop) மற்றும் ஹம்மிங் சத்தத்தை முழுமையாகத் தவிர்ப்பதற்கான கிரவுண்டிங் டெக்னிக்ஸ்.

  • ஸ்பீக்கர் அவுட்புட் & இறுதி சோதனை: ஸ்பீக்கர் கனெக்ஷன், சேஃப்டி செக் மற்றும் இறுதி ஆடியோ டெஸ்டிங்.

யாருக்கெல்லாம் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்?

  • எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடியோ ஆம்ப்ளிஃபையர் உருவாக்கத்தில் ஆர்வமுள்ள தொடக்கநிலை மாணவர்கள்.

  • சொந்தமாக ஆம்ப்ளிஃபையர் சர்வீஸ் மற்றும் அசெம்பிள் செய்ய விரும்பும் டெக்னீஷியன்கள்.

  • ஆடியோ வயரிங் மற்றும் கிரவுண்டிங் முறைகளைத் துல்லியமாகக் கற்றுக்கொள்ள விரும்புவோர்.

முக்கியக் குறிப்பு: இந்தப் பயிற்சி முழுவதும் தமிழில் நேரடி செய்முறை வடிவில் (Practical Demonstration) படம்பிடிக்கப்பட்டுள்ளது.

Deleting Course Review

Are you sure? You can't restore this back

Course Access

This course is password protected. To access it please enter your password below: